தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 5, 2022, 6:48 PM IST

ETV Bharat / city

எந்திரம் மூலம் ரூ.10-க்கு மஞ்சள் பை வழங்கும் திட்டம் தொடக்கம்

சென்னையில் எந்திரம் மூலம் ரூ.10-க்கு மஞ்சள் பை வழங்கும் திட்டம் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது.

chennai-launch-manjappai-scheme-to-provide-bag-for-rs-10-by-machine
chennai-launch-manjappai-scheme-to-provide-bag-for-rs-10-by-machine

சென்னை: உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு இன்று (ஜூன் 5) கோயம்பேடு சந்தையில் மக்கள் பயன்பாட்டிற்காக எந்திரம் மூலம் ரூ.10-க்கு மஞ்சள் பை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை செயலர் சுப்ரியா சாகு தொடங்கி வைத்தார். அப்போது மாநகராட்சி துணை ஆணையர் மனீஷ் உடனிருந்தார்.

இதுகுறித்து சுப்ரியா சாகு கூறுகையில், "கோயம்பேடு பூ மார்க்கெட்டில் சோதனை அடிப்படையில் இந்த மஞ்சப்பை தானியங்கி எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. ஒரு மாத காலம் சோதனை அடிப்படையில் செயல்படஉள்ளது. மக்கள் பயன்படுத்த எளிமையாக இருக்கும்பட்சத்தில் மாநிலம் முழுவதும் எந்திரம் வைக்கப்படும். நாட்டிலேயே முதல் முறையாக இந்த திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது " என்றார்.

முன்னதாக தமிழ்நாடு அரசு, மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தின் கீழ், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பொதுமக்கள் எளிதாக மஞ்சள் பையை பெற்றுக்கொள்ளும் வகையிலும் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நெகிழி இல்லா வளாகங்களை உருவாக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு 'மஞ்சப்பை' விருது

ABOUT THE AUTHOR

...view details