தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆக்கிரமித்த இடத்தை மீட்டு, பெயர்ப் பலகை மாட்டிய சென்னை மாநகராட்சி

சென்னை: சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இடத்தை மீட்டு, அதில் சென்னை மாநகராட்சி பெயர்ப் பலகை வைத்துள்ளது.

land grabbing
land grabbing

By

Published : Dec 13, 2019, 5:43 PM IST

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அமைந்தகரை அருகே உள்ளப்பகுதி பெரியகூடல். இங்கு சென்னை பெருநகர மாநகராட்சிக்கு சொந்தமான 0.25 ஏக்கர் நிலத்தை தனியார் சிலர் ஏற்கெனவே ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். அதோடு மட்டுமல்லாமல், தங்கள் பெயருக்கு நிலத்தைப் பட்டா மாறுதலும் செய்துள்ளனர். இதனை தாமதமாக தெரிந்துகொண்ட மாநகராட்சி நிர்வாகம், சென்னை மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய கடிதத்தில், மேற்படி நிலம் மாநகராட்சி நிர்வாகத்திற்குச் சொந்தமானது என தெரிந்தும் தனியார் ஆக்கிரமிப்பாளர்கள் சிலர், தங்களின் பெயர்களுக்கு பட்டா மாறுதல் செய்துள்ளனர். இதற்கு மாவட்ட நிர்வாகமும் உதவியுள்ளது. எனவே, முறைகேடாக வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்ட நிலம்

இதனைத்தொடர்ந்து, சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், தனியார் பெயர்களில் சட்டவிரோதமாக பதியப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ததோடு, அந்த இடம் மாநகராட்சிக்குச் சொந்தமானது எனவும் உத்தரவு பிறப்பித்தார்.

ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்ட நிலம்

பின்னர், மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் அந்த இடத்தை அதிகாரிகள் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். மேலும், ஆக்கிரமிப்பாளர்கள் அந்த இடத்தைக் காலி செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டு, அந்த நிலம் மாநகராட்சி நிர்வாகத்திற்குச் சொந்தமானது என்ற பெயர்ப் பலகையும் அங்கு வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆக்கிரமிப்புகளை அகற்றிய ஜேசிபி; அடித்து நொறுக்கிய அடையாளம் தெரியாத கும்பல்!

ABOUT THE AUTHOR

...view details