தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞருக்கு ஓடும் ரயிலில் பாலியல் தொந்தரவு -  ஒருவர் கைது!

சென்னையைச் சேர்ந்த உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞருக்கு ஓடும் ரயிலில் கந்தன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை உணர்ந்த வழக்கறிஞர் மற்றும் சகப்பயணிகள் அந்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞருக்கு ஓடும் ரயிலில் பாலியல் தொந்தரவு கந்தன் என்பவர் கைது!
சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞருக்கு ஓடும் ரயிலில் பாலியல் தொந்தரவு கந்தன் என்பவர் கைது!

By

Published : Apr 12, 2022, 7:11 PM IST

சென்னை: உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞருக்கு ஓடும் ரயிலில் பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை ஜோலார்பேட்டை காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் வழக்கறிஞர் ஒருவர், உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி பெங்களூருவில் மாவட்ட நீதிபதி தேர்வு நடைபெற்ற நிலையில் அதில் கலந்துகொள்ள பெங்களூரு சென்றுள்ளார்.

பின்பு தேர்வை முடித்துவிட்டு மீண்டும் 10ஆம் தேதி இரவு பெங்களூருவில் இருந்து, சென்னைக்கு முன்பதிவு செய்துவிட்டு, காவிரி எக்ஸ்பிரஸில் எஸ்11 கம்பார்ட்மென்டில், பயணம்செய்யும்பொழுது அதே கம்பார்ட்மென்டில் பயணம் செய்த திருவள்ளுவர் மாவட்டம், திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தன் (26) என்பவர், பெண் வழக்கறிஞருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர் மற்றும் சில பயணிகள் அந்த நபரை பிடித்து அரக்கோணம் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் கந்தன் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:தென்காசி; தந்தை- மகனுக்கு ஆயுள் தண்டனை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details