தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை விமான நிலைய முனையம்

நேற்றிரவிலிருந்து இன்று காலை வரை, சென்னையில் பெய்த மிதமான மழையினால், உள்நாட்டு விமான நிலைய முனையத்தில் உள்ள, பாதுகாப்பு சோதனைகள் நடத்தும் இடங்களில் பெருமளவு மழைநீர் கசிந்து ஒழுகியது.

rain water in Chennai airport

By

Published : Sep 19, 2019, 7:31 PM IST

இரு முனையங்கள்(உள்நாடு, சர்வதேசம்) அடங்கிய சென்னை விமான நிலையமானது ரூ. 2,100 கோடி செலவில் கட்டப்பட்டது. இந்த விமான நிலையம் 2013ஆம் ஆண்டு ஜனவரியில் திறப்பு விழா கண்டது. ஆனால், அதே ஆண்டின் மே மாதத்திலிருந்து புதிதாகக் கட்டப்பட்ட முனையங்களில் தொடர்ச்சியாக மேற்கூரைகள் உடைந்து விழுவது, கண்ணாடிக் கதவுகள், சுவர்களில் பதிக்கப்பட்ட கண்ணாடிகள் பெயர்ந்து விழுவது என இதுவரையில் 89 விபத்துகள் விமான நிலையத்தில் நடந்துள்ளன. விபத்துகளால் இதுவரை 17 பேர் லேசான காயங்களுடன் தப்பியுள்ளனர்.

ஆனால் கடந்த ஆறு மாதங்களாக இதுபோன்ற விபத்துக்கள் நடக்கவில்லை. இருப்பினும் நேற்றிரவிலிருந்து இன்று காலை வரை, சென்னையில் பெய்த மிதமான மழைக்கே உள்நாட்டு முனையத்தில் உள்ள பாதுகாப்பு சோதனைகள் நடத்தும் இடங்களில் பெருமளவு மழைநீர் கசிந்தது.

மேற்கூரை தரமாக அமைக்கப்படாததால் இவ்வாறு மழைநீர் கசிந்ததாகக் கூறப்படுகிறது. மேற்கூரையிலிருந்து ஒழுகிய மழைநீரை விமானநிலைய ஊழியா்கள் பிளாஸ்டிக் டப்புகளைக் கொண்டு நீரை வெளியே கொட்டினர். இதைப்பார்த்த விமான பயணிகள் அதிார்ச்சியடைந்தனா்.

இந்நிலையில் இன்று காலை ஐந்து மணிக்கு விமானத்தில் டெல்லி செல்வதற்காக திமுக எம்பி கனிமொழி சென்னை உள்நாட்டு முனையத்திற்கு வந்துள்ளார். அவரும் மழைநீர் ஒழுகும் காட்சியைப் பாார்த்து அதிா்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து அங்குள்ள விமானநிலைய அலுவலர்களிடமும் விசாரித்தாா். அதிகாரிகள் சமீபகாலமாகத்தான் இதுபோல் மழை நீர் கசிகிறது என்று கூறினர் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து மழை நீர் ஒழுகும் காட்சிகளை தனது செல்போனில் படம் பிடித்த அவர், அதை தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அதில், “முன்பெல்லாம் சென்னை விமானநிலையத்தில் மேற்கூரை உடைந்து விழுந்தது. தற்போது அது ஷவராக மாறிவிட்டது.தண்ணீரை டப்பில் பிடிக்கின்றனா்” என்று பதிவிட்டுள்ளாா்.

இதுபற்றி சென்னை விமானநிலைய இயக்குநா் ஶ்ரீகுமாரிடம் கேட்டதற்கு, “விமானநிலையத்தின் மேற்பகுதியில் கான்கிரீட் ரூஃப் கிடையாது. சீட்டுகள்தான் போடப்பட்டுள்ளன. அதில் ஒருசில இடங்களில் இதைப்போல் நீா்க்கசிவுகள் ஏற்படுகின்றன. அதுவும் நேற்று இரவிலிருந்துதான் ஏற்பட்டுள்ளது. அந்த இடங்களை கண்டுபிடித்து சரி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். ஓரிரு நாட்களில் சரிசெய்து விடுவோம்” என்றுகூறினாா்.

ABOUT THE AUTHOR

...view details