கைதிகளை சமூக சேவைகளில் ஈடுபடுத்தி சீர்திருத்த வழிவகை செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாடு முழுவதும் உள்ள மத்திய சிறை மற்றும் மாவட்ட சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தண்டனைக் கைதிகளை, கரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும், பாதுகாப்புப் பணிகளிலும் ஈடுபடுத்தக் கோரி வழக்கறிஞர் ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்திய நாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வில், காணொலிக் காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கைதிகளைச் சிறைக்கு வெளியில் பணியில் அமர்த்துவது என்பது அபாயகரமானது எனவும், அவர்கள் தப்பியோட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.