கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியம் இன்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மீறிய இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்து அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர்.
2 கோடி ரூபாயை எட்டிய அபராத தொகை ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்த 28 நாள்களில் தமிழ்நாடு காவல்துறை 2 லட்சத்து 81 ஆயிரத்து 975 வழக்குகளை பதிவு செய்துள்ளது. தடையை மீறியதாக 2 லட்சத்து 99 ஆயிரத்து 108 பேரை காவல்துறை கைது செய்து பிணையில் விடுவித்துள்ளது.
மேலும், 2 லட்சத்து 52 ஆயிரத்து 943 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை அபராதமாக 2 கோடியே 91 லட்சத்து 38 ஆயிரத்து 654 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் அmபராத தொகை மூன்று கோடி ரூபாயை நெருங்கவுள்ளது