நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு மூன்றாவது முறையாக நாடு முழுவதும் ஊரடங்கை மே 17ஆம் தேதி வரை நீட்டித்து அறிவித்தது.
தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோதிலும், கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையில் அதிதீவிரமாக கரோனா பரவி வருகிறது. இந்தப் பரவலைத் தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, அடிக்கடி கை கழுவவேண்டும், சமூக இடைவெளியுடன் இருக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என மக்களுக்குத் தொடர்ந்து மாநகராட்சி அறிவுறுத்தி வருகிறது.
இந்த வைரஸ் தொற்று, தனித்தனி வீடுகளில் இருக்கும் மக்களுக்குப் பரவுவது சற்று குறைவாக இருக்கும். ஆனால், ஒன்றாக வாழும் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகளில் ஒருவருக்கு தொற்று பரவினால் கூட, நினைத்ததை விட, வேகமாக ஒட்டுமொத்த மக்களுக்கும் பரவி விடும். எனவே, அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் மற்றவர்களை விட பாதுகாப்புடன் இருப்பது இன்றியமையாததாகும். இதற்கு முன் உதாரணமாக, ஒரு அடுக்குமாடி குடியிருப்பு விளங்கி வருகிறது.
இது தொடர்பாக டி.வி.ஹெச் பார்க் வில்லா எனப்படும் அடுக்குமாடி குடியிருப்பின் தலைமையதிகாரி கிரிதரன் கூறுகையில், 'முதல்கட்ட நடவடிக்கையாக இங்கேயே இருக்கும் குடியிருப்புவாசிகளை கண்டுபிடித்தோம். ஏனென்றால், சிலர் வெளியிலிருந்து நண்பர்கள் அறையில் தங்கி இருப்பார்கள். எனவே, எங்கள் குடியிருப்புவாசிகளை மட்டும் தங்க அறிவுத்தினோம்.