தமிழ்நாடு

tamil nadu

நீட் தேர்வுக்கு விலக்கு கொண்டு வர முயற்சியுங்கள் - கோரிக்கை வைத்த ஆந்திர மாணவருக்கு செவிமடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்

By

Published : Feb 3, 2022, 4:42 PM IST

Updated : Feb 3, 2022, 5:03 PM IST

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், ஆந்திர மாணவர் ஒருவர் இந்தியா முழுவதும் நீட் தேர்வுக்கு விலக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

ஆந்திர மாணவர்
ஆந்திர மாணவர்

சென்னை:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகம் செல்லும் வழியில் பிப்.3ஆம் தேதியான இன்று, சதீஸ் என்ற மாணவர் ஒருவர் 'CM SIR HELP ME' என்ற பதாகையுடன் நின்று கொண்டிருந்தார். அவர் ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச்சேர்ந்தவர்.

நீட் விலக்கு கோரிக்கை

அவரைக் கண்ட மு.க.ஸ்டாலின் அவரிடம் சென்று என்ன உதவி வேண்டும் என்று கேட்ட போது, 'முதலமைச்சர் நீட் தேர்வுக்கு எதிர்ப்புத்தெரிவித்து வருவதற்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், நீட் தேர்வுக்கு இந்தியா முழுவதும் விலக்கு கொண்டு வர வேண்டும்' எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு அந்த மாணவனிடம், நீட் தேர்வு ரத்து தொடர்பாக சட்டப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும்; இதுதொடர்பாக,தங்களின் முயற்சிக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார். மேலும் அவர் அகில இந்திய அளவிலும் இதற்காகத் தான் குரலை கொடுத்து வருவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலினிடம் நீட் விலக்கு கோரிக்கை வைத்த ஆந்திர மாணவர்

எனவே, நம்பிக்கையோடு ஊருக்குச் செல்லுமாறும் அம்மாணவனை முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இதனை அடுத்து அந்த மாணவரும், முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துப் புறப்பட்டார்.


இதையும் படிங்க:அண்ணாவின் 53ஆவது நினைவு நாள்: ஸ்டாலின் மரியாதை

Last Updated : Feb 3, 2022, 5:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details