தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாணவர் சேர்க்கை: அண்ணா பல்கலைக்கழகம் புதிய உத்தரவு

சென்னை: அங்கீகாரம் பெறாத பாடப்பிரிவுகளில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

By

Published : Dec 11, 2019, 6:47 PM IST

anna university
anna university

தமிழ்நாட்டிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்பது விதிமுறையாக இருக்கிறது.

அதன்படி, 2020 - 2021ஆம் ஆண்டுக்கான இணைப்பு அங்கீகாரம் பெற ஜனவரி 10ஆம் தேதிக்குள் இணையதளம் வழியாக தனியார் கல்லூரிகள் விண்ணப்பிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும், பாடப்பிரிவுகள் வாரியாக அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்க வேண்டுமெனவும் அங்கீகாரம் பெறாத பாடப்பிரிவுகளில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கல்லூரிகள் நிரந்தர கணக்கு அட்டை (பான் கார்டு), ஆதார் விவரங்களையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் விவரம், கட்டமைப்பு வசதிகள், பாடப்பிரிவுகளில் மாணவர்களை சேர்க்க விரும்பும் இடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: குடியுரிமை மசோதா நகலை தீயிட்டுக் கொளுத்திய மாணவர்கள்

ABOUT THE AUTHOR

...view details