சென்னை எழும்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை ரத்து செய்தது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி வழங்க வேண்டும். வறட்சியால், வெள்ளத்தால், இயற்கை சீற்றங்களால் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய தொடர்ந்து வலியுறுத்தினோம். அப்போதெல்லாம் கடனை தள்ளுபடி செய்யவில்லை.
’தேசிய வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்க’
சென்னை: கூட்டுறவு வங்கிக் கடன் ரத்து போலவே தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்ய அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
கடன் தள்ளுபடியை அரசியல் ரீதியாக பார்த்தால் இது தேர்தலை மனதில் வைத்து தான். ஜிஎஸ்டி வரி வருவாய் மூலம் மாநில அரசின் அனைத்து நிதிகளையும் மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது. மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தன்னிச்சையாக தலையிட முடியாது. மத்திய அரசு மறு சுதந்திர போராட்டத்தை இந்தியாவில் ஆரம்பிக்க வைத்துள்ளது. அது முதல் கட்டமாக விவசாயிகளிடமிருந்து தொடங்கியுள்ளது. எங்கள் வாழ்க்கையோடு விளையாடும் பிரதமர், அதற்கான பலனை விரைவில் அனுபவிப்பார்" என்றார்.
இதையும் படிங்க:’பழைய அனல் மின் நிலையங்களை மூடினால் ரூ.35 ஆயிரம் கோடி மிச்சமாகும்’