தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா தொற்றால் இதுவரை 94 போலீசார் உயிரிழப்பு

கடந்த ஆண்டு கரோனா தொற்றின் தாக்கம் தொடங்கியது முதல் தற்போதுவரை தமிழ்நாடு காவல் துறையில் 94 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா தொற்றால்  இதுவரை 94 போலீசார் உயிரிழப்பு
கரோனா தொற்றால் இதுவரை 94 போலீசார் உயிரிழப்பு

By

Published : May 13, 2021, 6:57 PM IST

கரோனா தொற்றின் தாக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டையே உருக்குலைத்து வரும் நிலையில், முன்களப் பணியாளர்களாக பணியாற்றி வரும் காவல்துறையினர் கரோனா நோய் தொற்றுக்கு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்தாண்டு மார்ச் 1ஆம் தேதி முதல் இதுவரை தமிழ்நாடு காவல் துறையில் 3 ஆயிரத்து 70 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுவரை ஆயிரத்து 722 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஆயிரத்து 388 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு கரோனா தொற்றின் தாக்கம் தொடங்கியது முதல் தற்போதுவரை 94 பேர் உயிரிழந்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காவல் துறையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு காவல் துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக காவல் துறையினருக்கு தடுப்பூசி முகாம்கள் அமைத்து அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அதேபோல 50 வயதுக்கும் மேற்பட்ட காவல் துறையினரின் பணிச்சுமையைக் குறைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை 99 ஆயிரத்து 187 காவல் துறையினர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் இதுவரை 24 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னையில் 4 ஆயிரத்து 496 பேர் கரோனாவல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 ஆயிரத்து 600 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 700 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

காவல் துறையினர் பணியின்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. காவல் துறையில் ஏற்படும் இழப்பும் பாதிப்பும் அவர்களின் குடும்பத்தாரோடு மட்டும் நின்றுவிடாமல் ஒட்டுமொத்த சமூகத்திற்கே பேரிழப்பை ஏற்படுத்தும் என்பதால் காவல் துறையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கைகள் வலுத்துள்ளன.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details