தமிழ்நாடு

tamil nadu

இரவு 9 மணி செய்திச்சுருக்கம் Top Ten 10 @ 9 PM

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச்சுருக்கம்.

By

Published : Aug 21, 2021, 8:59 PM IST

Published : Aug 21, 2021, 8:59 PM IST

இரவு 9 மணி செய்திச்சுருக்கம்
இரவு 9 மணி செய்திச்சுருக்கம்

1.ஊரடங்கு நீட்டிப்பு - கடற்கரையில் பொது மக்கள் அனுமதி...

கரோனா காரணமாக அனுமதி மறுக்கப்பட்ட கடற்கரையில், ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் மக்கள் அனுமதிக்கப்படுவர் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

2.50% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி!

50 விழுக்காடு இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது.

3.நோ சூடு... நோ சொரணை... - மணமக்களை வாழ்த்திப் பேனர் வைத்த நண்பர்கள்

நாமக்கல்லில் நடைபெற்ற திருமணத்தில் மணமக்களை வாழ்த்தும் விதமாக நித்யானந்தாவின் வாசகங்களை வைத்து, நண்பர்கள் அடித்த பேனர் சமூக வலைதளங்களில் பரவி நகைச்சுவையை ஏற்படுத்தி வருகிறது.

4.ரக்‌ஷா பந்தன் பண்டிகையும் கொண்டாடும் காரணமும்

ரக்‌ஷா பந்தன் பண்டிகை என்றால் என்ன என்பது குறித்தும், கொண்டாடும் காரணங்கள் குறித்தும் இத்தொகுப்பில் காணலாம்.

5.யானைகளுக்கு ஆந்த்ராக்ஸ் பாதிப்பை கண்காணிக்க குழு- கா. ராமச்சந்திரன்

ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி காட்டு யானைகள் உயிரிழந்து வருவதை கண்காணிக்க சிறப்பு ஆய்வுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது என வனத்துறை அமைச்சர் கா. ராமசந்திரன் கூறினார்.

6.பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய இயக்கம் - மம்தா அழைப்பு

2024ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தல்வரை காத்திருக்காமல் உடனடியாக பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய இயக்கத்தை கட்ட வேண்டும் என மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

7.செப்டம்பரில் பள்ளிகள் திறப்பது உறுதி - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

8.’ஒரு நாள் மழைக்கே இந்த நிலை’ - தயாநிதி மாறன்

கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற அவல நிலை ஆட்சியால்தான், தற்போது சென்னையில் ஒரு நாள் பெய்த மழைக்கே தண்ணீர் தேங்கியுள்ளது என மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

9.உலகின் பல்வேறு மொழிகளில் வெளியாகும் ஹன்சிகாவின் '105'

ஹன்சிகா நடிப்பில் ஒரே ஷாட்டில் ஒரே கதாபாத்திரத்தை வைத்து எடுக்கும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான 'ஒன் நாட் ஃபைவ் மினிட்ஸ் (105)' உலகின் வெவ்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

10.மதுபோதையில் இளைஞர் ரகளை அதிர்ச்சியில் மக்கள்

குரோம்பேட்டை அருகே ஜிஎஸ்டி சாலையில் மதுபோதையில் ஒரு இளைஞர், அங்கு சென்ற பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டார்.

ABOUT THE AUTHOR

...view details