தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 28, 2022, 6:31 PM IST

ETV Bharat / city

வணிகவரி, பதிவுத்துறையில் வெளியான புதிய 32 திட்டங்கள் என்னென்ன?

அவசர நிமித்தமாக பதிவு செய்ய விரும்பும் பொதுமக்களின் வசதியை ஏற்படுத்தும் விதமாக ஒரு அவசர முன்பதிவு டோக்கனுக்கு ரூ.5,000 கட்டணமாக வசூலிக்கப்படும் என்பன உள்ளிட்ட வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் 32 புதிய திட்டங்களை அமைச்சர் பி.மூர்த்தி அறிவித்துள்ளார்.

அமைச்சர் அமைச்சர் பி.மூர்த்தி
அமைச்சர் அமைச்சர் பி.மூர்த்தி

சென்னை:அவசர நிமித்தமாக பதிவு செய்ய விரும்பும் பொதுமக்களின் வசதிக்காக ஆவணப் பதிவிற்கான முன்பதிவு தொகை வழங்குவதில் தட்கல் முறை அறிமுகப்படுத்தப்படும். ஒரு அவசர முன்பதிவு டோக்கனுக்கு ரூ.5000 கட்டணமாக வசூலிக்கப்படும் என்பன உள்ளிட்ட வணிகவரி மற்றும் பதிவுத்துறைச் சார்ந்த புதிய 32 அறிவிப்புகளை அமைச்சர் பி.மூர்த்தி சட்டப்பேரவையில் இன்று (ஏப்.28) வெளியிட்டுள்ளார். அவை பின்வருமாறு,

1. பொதுமக்கள் தாங்கள் பெரும் சரக்கு அல்லது சேவைக்கான விலைப்பட்டியலை கேட்டுப் பெறுவதை ஊக்குவிக்கும் விதமாக வணிகவரித் துறையில் "எனது விலைப்பட்டியல்; எனது உரிமை" என்ற திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக தொடர் செலவினம் ஆக ரூ.1.22 கோடி மற்றும் தொடர் செலவினம் ஆக ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
2. வணிகவரித் துறையில் வரி ஏய்ப்பினைத் தடுப்பதில் உதவுபவர்களுக்கு வெகுமதி வழங்க நடப்பு ஆண்டில் ரூ.1.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

3. வணிகவரி துறையின் நுண்ணறிவு பிரிவில் தனியார் தொழில்நுட்ப வல்லுநர்களின் சேவை பயன்படுத்தப்படும். இதற்கென தொடர் செலவினம் ஆக ரூ.38 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
4. வணிக வரித்துறையில் வரி ஆய்வுக்குழு அமைக்கப்படும். இதற்கான தொடர் செலவினம் ரூ.72 லட்சம் ஆகும்.
5. வணிக வரித்துறையின் அழைப்பு மையம் மேம்படுத்தப்படும். இதற்காக தொடர் செலவினம் ரூ.34 லட்சம் ஆகும்.
6. வணிகவரி கூடுதல் ஆணையர் தலைமையில் தனி தணிக்கைப் பதிவு உருவாக்கப்படும். இதற்கான தொடர் செலவினம் ஆக 69.14 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
7. சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள இரண்டு இணை ஆணையர் நுண்ணறிவு பணியிடங்கள் கூடுதல் ஆணையர் நிலைக்கு தரம் உயர்த்தப்படும் இதற்காக தொடர் செலவினம் ஆக ரூ.19.34 லட்சம் செலவு மேற்கொள்ளப்படும்.
8. வணிகவரித் துறையில் பயிற்சி நிலைய இயக்குனர் பணியிடம் தரம் உயர்த்தப்பட்டு அவரது தலைமையின் கீழ் எளிய வணிக பிரிவு உருவாக்கப்படும். இதற்காக தொடர் செலவினம் ரூ.100.14 லட்சம் ஆகும்.
9. வரி ஏய்ப்பை கண்டுபிடிக்க தேசிய தகவல் மையம் உருவாக்கியுள்ள ஜிஎஸ்டி பிரைம் என்ற மென்பொருள் ரூ.47.20 லட்சம் செலவில் வாங்கி பயன்படுத்தப்படும்.
10. வணிக வரித்துறையில் சுற்றும் படையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும். இதற்காக ரூ.24 லட்சம் ஒதுக்கீடு.
11. தீர்ப்பாயம் அல்லது உயர் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் முந்தைய சட்டங்கள் தொடர்பான ஆணைகளில் வரி இழப்பு இனங்களைக் கையாள புதிய வழிமுறைகள் உருவாக்கப்படும்.
12. வணிகவரித் துறையில் 2 அலுவலகக் கட்டடங்கள் ரூ.7.80 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
13. பொதுமக்களுக்கு பத்திரப்பதிவு தொடர்பான சேவைகளை அளிக்க ஒருங்கிணைந்த சேவை மையம் ரூ.1 கோடி செலவில் உருவாக்கப்படும்.
14. சார் பதிவாளர் அலுவலகங்களில் பொது மக்களுக்கான தேவைகளை நிறைவு செய்யும் வகையில் ரூ.50 லட்சம் செலவில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
15. பதிவுத்துறையில் ஒருங்கிணைந்த தகவல் மையம் ரூ.50 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.
16. திருமண சான்றுகளில் திருத்தம் செய்வதற்காக இணைய வழியாக விண்ணப்பிக்கும் வசதி ரூ.6 லட்சம் செலவில் அறிமுகப்படுத்தப்படும்.
17. அவசர நிமித்தமாக பதிவு செய்ய விரும்பும் பொதுமக்களின் வசதிக்காக ஆவணப் பதிப்பிற்கான முன்பதிவு தொகை வழங்குவதில் தட்கல் முறை அறிமுகப்படுத்தப்படும். ஒரு அவசர முன்பதிவு டோக்கனுக்கு ரூ.5000 கட்டணமாக வசூலிக்கப்படும்.
18. அலுவலகங்களில் பணியாற்றும் பொதுமக்களின் வசதிக்காக விடுமுறை நாளன்று பதிவு பணியை மேற்கொள்ளும் வகையில் சார்பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும். இதற்கு கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படும்.
19. பதிவு நடைமுறைகள் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ரூ.38 லட்சம் செலவில் மாவட்டங்கள் தோறும் சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்படும்.

20. அரசு நிலங்கள் பதிவு செய்யப்படுவதை ஆரம்ப நிலையிலேயே ஸ்டார் மென்பொருள் வழியாக தன்னிச்சையாக தடுக்கும் திட்டம் ரூ.18 லட்சம் செலவில் அறிமுகப்படுத்தப்படும்.
21. பதிவுத் துறையில் உள்ள மிக பழமையான 50 கட்டடங்களை அப்புறப்படுத்தி ரூ.96.64 கோடி செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
22. பதிவுத்துறையில் ஆவண எழுத்தர் உரிமங்கள் புதிதாக வழங்கப்படும். இதன் மூலம் ஏறத்தாழ 20 ஆயிரம் நபர்கள் பயன் பெறுவர்.
23. பதிவுத்துறையில் கட்டடக் களப் பணி மேற்கொள்வதற்காக பொறியியல் பட்டதாரிகளுக்கு களப் பணி மேற்பார்வையாளர் உரிமம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
24. சங்கங்களின் ஆண்டறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்களின் தாமத கோர்வையாக விதிக்கப்படும் அபராத தொகையை வசூலிக்க சமாதானத் திட்டம் செயல்படுத்தப்படும்.
25. முத்திரைத்தாள் வினியோக சீர்திருத்தம் மேற்கொள்ள ஏதுவாக இந்திய முத்திரைச் சட்டம் 1899 இல் உரிய சட்டத்திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். குறைந்தபட்சமாக ரூ.100 என நிர்ணயித்து நடைமுறைப்படுத்தப்படும்.
26. சென்னை பதிவு மண்டலம் பிடிக்கப்பட்டு, இரண்டு மண்டலங்கள் உருவாக்கப்படும். இதற்காக தொடர் செலவினம் ரூ.75.24 லட்சம் மற்றும் தொடரா செலவினம் ரூ.26.10 லட்சம் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
27. மதுரை பதிவு மண்டலம் பிரிக்கப்பட்டு இரு மண்டலங்களாக உருவாக்கப்படும். இதற்காக தொடர் செலவினம் ரூ.75.24 லட்சம் மற்றும் தொடரா செலவினம் ரூ.26.10 லட்சம் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
28. சென்னை மண்டலத்தில் தாம்பரத்தை தலைமை இடமாக கொண்டு கூடுதலாக ஒரு பதிவும் மாவட்டம் உருவாக்கப்படும். இதற்காக தொடர் செலவினம் ரூ.92.75 லட்சம் மற்றும் தொடரா செலவினம் ரூ.33.40 லட்சம் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
29. கோயம்புத்தூர் பதிவு மாவட்டத்தை பிரித்து, இரு பதிவு மாவட்டங்கள் உருவாக்கப்படும். இதற்காக தொடர் செலவினம் ரூ.92.75 லட்சம் மற்றும் தொடரா செலவினம் ரூ.33.40 லட்சம் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
30. பதிவுத்துறையில் 5 மாவட்ட பதிவாளர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இதற்காக தொடர் செலவினம் ரூ.196 லட்சம் மற்றும் தொடரா செலவினம் ரூ91 லட்சம் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
31. சீட்டு மற்றும் சங்கங்கள் செயல்பாடுகளை திறம்பட கண்காணிப்பதற்காக இருபத்தி ஆறு மாவட்ட தலைநகர்களில் உள்ள நிர்வாக மாவட்ட பதிவாளர் பணியிடங்கள் உதவி பதிவுத்துறை தலைவர் நிலைக்குத் தரம் உயர்த்தப்படும். இதற்கான தொடரா செலவீனம் ரூ.15 லட்சம் ஆகும்.
32. சிறப்பாக செயல்படும் பதிவு துறை அலுவலர்களை ஊக்குவிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் இதற்காக தொடர் செலவினமாக ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பன ஆகும்.
இதையும் படிங்க: வரி ஏய்ப்பு செய்வோர் மீது குண்டர் சட்டம் பாயும் - அமைச்சர் மூர்த்தி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details