தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 31, 2022, 10:43 PM IST

ETV Bharat / city

தெற்காசியாவில் 15% மக்களுக்கு மரபணு மாற்றத்தால் சர்க்கரை நோய் - சென்னை ஐஐடி

சென்னை ஐஐடியின் சர்வதேச ஆராய்ச்சிக் குழு, தெற்காசியாவில் 15 விழுக்காடு மக்கள் மரபணு மாற்றத்தால் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் நோய்களுக்கு ஆளாவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி

சென்னை: இந்தியா, தெற்காசிய நாடுகளில் 15 விழுக்காடு மக்களின் மரபணுவில் சர்க்கரை, ரத்த அழுத்தம் இருதய நோய் பாதிப்பு போன்றவற்றை உருவாக்கக்கூடிய புரதம் மாறுபாடு அடைந்துள்ளதாக சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளது.

சென்னை ஐஐடியின் உயிர் தொழில்நுட்பவியல் துறை பேராசியர் நிதிஷ் மகபத்ரா தலைமையிலான சர்வதேச ஆராய்ச்சிக் குழு, இந்த ஆய்வினை இந்தியா மற்றும் தெற்காசியா நாடுகளில் வசிக்கும் மக்களின் மரபணு மாற்றம் குறித்த ஆராய்ச்சி மேற்கொண்டது.

உயிர் தொழில்நுட்பவியல் துறை பேராசியர் நிதிஷ் மகபத்ரா தலைமையிலான சர்வதேச ஆராய்ச்சிக் குழு ஆய்வு

நோய்த் தாக்கும் இடர்

தெற்காசிய மக்கள் இருதயம் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்களால் அதிமாக பாதிக்கும் ஆபத்தில் உள்ளனர். இந்தக் மாற்றத்திற்கு காரணம் சுற்றுச்சூழல் காரணிகள் தவிர, நமது மரபியல் கட்டமைப்பும் என நம்பப்படுகிறது.

இருப்பினும், நோய் அபாயத்தை அதிகரிக்கும் முக்கிய மரபணு மாறுபாடுகள் சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை. கார்டியோ-மெட்டபாலிக் நோய்களுக்கான ஒரு முக்கிய மரபணு மாற்றம் என்பதைக் கண்டறிந்துள்ளோம்.

மரபியல் கட்டமைப்புகளில் நிகழும் மாற்றங்கள்

மாறுபாடு அடைந்த புரதம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு மனித மரபணுவில் கடத்தப்பட்டு மரபுவழி நோய்களை ஏற்படுத்தும் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

சர்க்கரை நோய் தாக்கம்

அந்த வகையில் மனித உடலில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும் இன்சுலின் சுரப்பதை மாறுபாடைந்த குரோமோகிரானின் புரதத்தில் உள்ள PANCREASTATIN (கணைய அழற்சி மூலக்கூறு) முக்கியக் காரணமாகிறது. மேலும், இந்த இன்சுலின் சுரப்பை குறைத்து சர்க்கரை நோயை ஏற்படுத்துவதைக் கண்டறிந்துள்ளனர்.

Pancreastatin மூலக்கூறு ஆனது இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளில் 15 விழுக்காடு மக்களிடையே காணப்படுவதுடன் மரபுவழி நோய்களான சர்க்கரை, இருதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், தீவிர சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தும் என்பது ஆய்வின் முடிவாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: ஆன்லைன் நெல் கொள்முதல் வேண்டாம்: சாலையில் படுத்து போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details