சென்னை: தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையில் படித்து உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்ததுது.
இந்தத் திட்டத்தை சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம், உயர்கல்வித்துறையுடன் இணைந்து செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் ஏற்கனவே இருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் என்பதை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்தத் திட்டத்தில் உதவியை பெறுவதற்கு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில் தற்பொழுது சுமார் 93 மாணவிகள் பதிவு செய்துள்ளனர். இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு ரூ. 698 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு ‘புதுமைப் பெண் திட்டம்’ என்றும் பெயர் சூட்டி உள்ளது.