சவுதி அரேபியா அரசுக்கு சொந்தமான இரண்டு முக்கிய கச்சா எண்ணெய் கிடங்குகள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதால் எண்ணெய் சந்தையில் பெரும் இழப்பு நேர்ந்தது.
இந்நிலையில் பங்கு சந்தையில் எண்ணெய் பங்குகள்(Oil Stocks) உயர்வை சந்தித்து வருகின்றன. மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸில் உள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் பங்குகள் 3.65 விழுக்காடுகள் உயர்ந்தும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் பங்குகள் 3.64 விழுக்காடுகள் உயர்ந்தும் காணப்பட்டது.
மேலும் அதிக அளவு உயர்வை சந்திக்காதபோதிலும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 2.68 விழுக்காடுகள் உயர்ந்துள்ளன. தினசரி வர்த்தமாகி வரும் இன்ட்ராடே(Intra-Day) டிரேடிங்கில் ப்ரென்ட்குரூட்(Brent Crude ) கச்சா எண்ணெய் நிறுவனம் ௦.95 விழுக்காடு உயர்ந்து வர்த்தமாகிவருகிறது.
இன்னும் சில நாட்களுக்கு பொருள் வணிகமான கமாடிட்டியில் (Commodity) முதலீடு செய்தல் அதிகம் லாபம் பெறலாம் என பங்கு சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: எண்ணெய் நிறுவனங்களுக்குள் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்!