மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (மார்ச் 30) சுமார் 1,128 புள்ளிகள் (2.30 விழுக்காடு) உயர்ந்து 50,136.58 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவுசெய்தது.
அதேபோல், தேசியப் பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 337.80 புள்ளிகள் (2.33 விழுக்காடு) உயர்ந்து 14,845.10 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவுசெய்தது.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்:
அதிகபட்சமாக, ஹெச்.சி.எல். நிறுவனத்தின் பங்குகள் நான்கு விழுக்காடு உயர்வுகண்டது. அதற்கு அடுத்தபடியாக ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, இன்போசிஸ், என்.டி.பி.சி., நெஸ்லே இந்தியா, டி.சி.எஸ். உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வைச் சந்தித்தன.
அதேவேளை மஹிந்திரா & மஹிந்திரா, ஆக்ஸிஸ் வங்கி, பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் சரிவைக் கண்டன.
இதையும் படிங்க:பிளேஸ்டேஷன் 3 சாதனத்தை நிறுத்தப்போகிறதா சோனி - அதிர்ச்சியில் கேமர்ஸ்