மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று (ஆகஸ்ட் 18) வர்த்தகமானதைவிட சுமார் 150 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. இன்று நாள் முழுவதும் ஏற்றத்திலேயே வர்த்தகமான இந்திய பங்குச் சந்தை கடைசி 30 நிமிடங்களில் சிறிது சரிவைச் சந்தித்தது.
இன்றைய வர்த்தக நாள் இறுதியில் சென்செக்ஸ் 86.47 புள்ளிகள் (0.22 விழுக்காடு) அதிகரித்து, 38,614.79 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 23.05 புள்ளிகள் (0.20 விழுக்காடு) உயர்ந்து 11,408.40 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்
அதிகபட்சமாக டெக் மஹேந்திரா நிறுவனத்தின் பங்குகள் உயர்வை சந்தித்து வர்த்தகமானது. அதேபோல பாரதி ஏர்டெல், மாருதி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஆசியன் பெயின்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றம் கண்டன.
மறுபுறம் பஜாஜ் ஆட்டோ, ஓ.என்.ஜி.சி, நெஸ்லே இந்தியா, ஹெச்.யூ.எல், கோட்டக் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்