தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

சந்தை நிலவரம்: 5ஆவது நாளாக தொடர் சரிவில் இந்திய பங்குச் சந்தைகள்

இந்திய பங்குச் சந்தைகள் ஐந்தாவது நாளாக தொடர் சரிவைச் சந்தித்துவருகிறது. குறிப்பாக பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் 8 விழுக்காடு சரிவைச் சந்தித்தன.

Market Roundup
Market Roundup

By

Published : Sep 23, 2020, 5:23 PM IST

வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 65.66 புள்ளிகள் (0.17 விழுக்காடு) சரிந்து 37,668.42 புள்ளியிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 21.80 புள்ளிகள் (0.2 விழுக்காடு) சரிந்து 11,131.85 புள்ளியிலும் வர்த்தகம் நிறைவடைந்தன.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்:

  • அதிகபட்சமாக ஆக்சிஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.43 விழுக்காடு உயர்வைச் சந்தித்தது. அதற்கு அடுத்தபடியாக கோல் இந்தியா, கெயில், ஹெச்.டி.எஃப்.சி., இந்துஸ்தான் யுனிலிவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக உயர்வை சந்தித்தன.
  • முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் எட்டு விழுக்காடு சரிவைச் சந்தித்தன. இன்ப்ராடெல், டாடா ஸ்டீல், ஜீல், இண்டஸ்இண்ட் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டன.
    இந்திய பங்குச் சந்தைகள் சரிவு

தங்கம், வெள்ளி விலை:

சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.48,100-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை ஒரு கிலோ ரூ.59,000-க்கு விற்பனையானது.

பெட்ரோல், டீசல் விலை:

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.23க்கும், டீசல் ரூ.76.80க்கும் விற்பனையானது.

இதையும் படிங்க:ஒரு விழுக்காட்டினரே வருமான வரி செலுத்துகின்றனர் - மத்திய அரசு

ABOUT THE AUTHOR

...view details