டெல்லி: 2021-22 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை இரு தினங்களில் வெளியாகவுள்ள நிலையில், நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகராக (Chief Economic Advisor) டாக்டர். வி ஆனந்த நாகேஸ்வரன் (V Anantha Nageswaran) வெள்ளிக்கிழமை (ஜன.28) நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் தனது 3 ஆண்டு பணியை நிறைவுசெய்துவிட்டு தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ண மூர்த்தி கல்விப் பணிக்கு திரும்பினார்.
இந்த நிலையில் வி. ஆனந்த நாகேஸ்வரன் நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், 2021-22ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை ஜன.31ஆம் தேதி வெளியாகிறது.