பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வுகளை வெளியிடும் சர்வதேச ஆய்வு நிறுவனமான மூடீஸ் அன்மையில் இந்தியா பொருளாதார நிலவரம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், வரும் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.3 விழுக்காடாக குறையும் எனத் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நாட்டின் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் உள்ள நிலையில் மூடீஸ் நிறுவனத்தின் இந்த அறிக்கை இந்தியச் சந்தையில் மந்தநிலையை மேலும் அதிகரிக்குமோ என்ற கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து மத்திய நிதித் துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளார்களிடம் விளக்கமளித்தார். அதில் அவர், நாட்டில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதற்கு சர்வதேச சூழலே முக்கியக் காரணம் எனத் தெரிவித்தார்.