ஜிஎஸ்டியின் 37ஆவது கவுன்சில் கூட்டத்துக்கு முன், மத்திய நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்து சில அறிவிப்புகள் வெளியிட்டார். இதில் முக்கிய அம்சமாக கருதப்பட்டது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி குறைப்பு.
2019-20ஆம் நிதியாண்டிலிருந்து, வேறு எந்தச் சலுகையும் பெறாத உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 22 விழுக்காடாகக் குறைக்கப்படுகிறது என நிதி அமைச்சர் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடன் மதிப்பீட்டு நிறுவனமான ஐசிஆர்ஏ(ICRA), கார்ப்பரேட் வரி குறைப்பின் மூலம் மின் துறை சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தது. மேலும் கார்ப்பரேட் வரி குறைப்பதால் வருடத்துக்கு ரூ.2500 கோடி வரை மின் துறையில் சேமிக்க முடியும் எனவும் பவர் கிரிட்(Power Grid), தாமோதர் வேலி கார்ப்பரேஷன்(Damodar Valley Corporation) என்எல்சி இந்தியா(NLC India) போன்ற நிறுவனங்கள் வீழ்ச்சியில் இருந்து மீளும் எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் வீழ்ச்சியில் வங்கி பங்குகள்!