கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபட 21 நாள் முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் 300 க்கும் மேற்பட்ட பொருளாதார வல்லுநர்கள், கல்வியாளர்கள், சமூக பணியாளர்கள் மற்றும் முன்னாள் அரசு ஊழியர்கள் ஆகியோர், கோவிட் -19 முழு அடைப்பால் ஏற்படும் பாதிப்பை சரிசெய்யும் வகையில் தங்களுடைய மாதாந்திர உணவு ஆதரவை ஒவ்வொரு குடும்பத்திற்கு குறைந்தது ஆறு ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதலமைச்சர்களை வலியுறுத்தியுள்ளனர்.
அதில், “குடும்பத்தின் ஒவ்வொரு பெண் உறுப்பினருக்கும் அடுத்த மூன்று மாதங்களில் குறைந்தப்பட்ச மத்திய மற்றும் மாநில பங்களிப்பை மாதத்திற்கு குறைந்தது ஆறு ஆயிரமாக ஆக உயர்த்த வேண்டும்“ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.