கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாதம் முதல் பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக பல்வேறு வல்லரசு நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சர்வதேச நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத், "ஜூன் மாதத்தில் நிறைவடையும் காலாண்டில் முன்னணி உலகப் பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில், இந்தியாதான் மிக மோசமான ஜிடிபி சரிவை எதிர்கொண்டுள்ளது" என்றார்.
இது குறித்து கீதா கோபிநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுள்ள வரைபடத்தின் மூலம் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் ஜிடிபி ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 25.6 விழுக்காடு சரிந்துள்ளதும், ஜி -20 நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியப் பொருளாதாரம்தான் கடும் சரிவை எதிர்கொண்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரிட்டனின் பொருளாதாரம் 20.4 விழுக்காடு வரை சரிவை எதிர்கொண்டுள்ளது. அதேபோல ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரம் 11.7 விழுக்காடும் அமெரிக்காவின் பொருளாதாரம் 9.1 விழுக்காடும் சரிவைச் சந்தித்துள்ளன.
மற்ற முன்னணி நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மட்டும் 12.3 விழுக்காடு உயர்ந்துள்ளது என்பனவும் தெரிய வந்துள்ளது.