கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக நாடு முழுக்க 21 நாட்கள் பூட்டுதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாநில, மாவட்ட, கிராம எல்லைகள் மூடப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்கள் வசித்த இடங்களின் தெருக்களும் அடைக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் தடுப்பு பணிகளில் சுகாதாரப் பணியாளர்களும், பாதுகாப்பு பணியில் காவல் துறையினரும் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். தொழிலாளர்கள் கடும் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சிறு குறு நிறுவனங்களுக்கு கே.எஃப்.சி என்னும் கேரள நிதிக் கழகம் கடன் வழங்க சம்மதித்துள்ளது. இதில் சிறு குறு தொழிலாளர்கள் ரூ.50 லட்சம் வரை கடன் பெறலாம்.