தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

41ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் தொடங்கியது... எதிர்பார்ப்புகள் என்னென்ன?

2017ஆம் ஆண்டு நடப்பில் இருந்த அனைத்து வரிகளையும் ஒருங்கிணைத்து, சரக்கு, சேவை வரியை மத்திய அரசு அமல்படுத்தியது. மாதந்தோறும் நடைபெறும் இதன் கூட்டத்தில் வரி விதிப்புகள், வரி சலுகைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும். இச்சூழலில் இன்று 41ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தற்போது தொடங்கியுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

By

Published : Aug 27, 2020, 12:34 PM IST

டெல்லி:ஜிஎஸ்டி கவுன்சிலின் 41ஆவது கூட்டம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில், இழப்பீடு வழங்குவதற்காக ஆடம்பரப் பொருள்கள் மீது கூடுதல் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. 2019 - 2020 நிதியாண்டில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.

எனினும், 95 ஆயிரத்து 444 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே கூடுதல் வரி வசூலிக்கப்பட்டது.

தற்போது கரோனா நெருக்கடியால் அரசுக்கு ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளது. இச்சூழலில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 41-வது கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கியுள்ளது.

இதில், இழப்பீட்டுத் தொகைக்காக மாநிலங்கள் கடன் வாங்கிக் கொள்ள அனுமதிப்பது குறித்தும், அதற்கு மத்திய அரசு உத்தரவாதம் அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

இழப்பீட்டுக்காக கூடுதல் வரி விதிக்கப்படும் பட்டியலில் கூடுதலாக பொருள்களை சேர்க்கலாமா அல்லது கூடுதல் வரியை அதிகரிக்கலாமா என்பது குறித்து அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கருதப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details