இந்திய அளவில் உணவு டெலிவரி செய்வதில் சொமேட்டோ நிறுவனம்முன்னிலை வகித்து வருகிறது. பல வகையான சலுகைகள், ஆன் டைம் டெலிவரி போன்ற வசதிகள் உள்ளதால் மக்கள மத்தியில் சொமேட்டோ நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், சொமேட்டோ நிறுவனம் சொமேட்டோ ப்ரோ (ZOMATO PRO) எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதில் பல வகையான சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கவுள்ளது.
இது குறித்து சொமேட்டோ இணை நிறுவனர் குப்தா கூறுகையில், "சொமேட்டோ கோல்டில் இருந்ததை விட 50 விழுக்காடு அதிகமான உணவகங்களை சொமேட்டோ ப்ரோவில் இணைத்துள்ளோம். உணவு டெலிவரியில் ப்ரோ வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதனால், உங்களின் உணவு 15 முதல் 20 நிமிடங்களில் வந்துவிடும். 10 நாடுகளில் உள்ள அனைத்து சொமேட்டோ கோல்டு உறுப்பினர்களும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்குள் தாமாகவே ’சொமேட்டோ ப்ரோ’ வெர்ஷனுக்கு மாற்றப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.
தற்போது, கரோனா அச்சம் காரணமாக சொமேட்டோ ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தபடியே உணவு டெலிவரி செய்து வருகின்றனர்.