தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பழைய ஆண்ட்ராய்டு வைத்திருப்பவர்களுக்கு கடைசி அலெர்ட் விட்ட வாட்ஸ்அப்!

பழைய ஆண்ட்ராய்டு மென்பொருளில் இயங்கும் செயலியில் இனி வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது என தாய் நிறுவனமான ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

By

Published : Dec 11, 2019, 7:01 PM IST

WhatsApp won't work
WhatsApp won't work

பிரபல சாட் செயலியாக வலம் வரும் வாட்ஸ்அப்பை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து கோடிக்கணக்கான மொபைல் போன்களில் பயன்படுத்த முடியாது என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல், ஆப்பிள் போன் iOS8 (Apple Iphone) அல்லது அதற்கு முந்தைய மென்பொருளில் இயங்கும் ஆப்பிள் போன்களும், அதேபோல் 2.3.7 அல்லது அதைவிடவும் பழமையான ஆண்ட்ராய்டு மென்பொருளில்(Android Phones) இயங்கும் அனைத்து போன்களிலும் இயங்கும் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட உள்ளது.

அதே போன்று விண்டோஸ் போன்களில் (Windows Phones) வரும் 31ஆம் தேதிக்குப் பிறகு வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது.

இனி பழைய போன்களை வைத்துள்ளவர்களால் புதிய வாட்ஸ்அப் கணக்குகளை தொடங்கவோ, பழைய கணக்குகளை புதுப்பிக்கவோ முடியாத வகையில் ஏற்கனவே தொழில்நுட்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனால் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் அவர்களது வாட்ஸ்அப் கணக்குளை இழக்க நேரிடும் என்பதால், இணையவாசிகள் இதற்கு கவலை தெரிவித்து வருகின்றனர்.

இதயும் படிங்க: பெருகுமா பிரம்பு பொருள் உற்பத்தி!

ABOUT THE AUTHOR

...view details