இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தனது வாடிக்கையாளர்களுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
’வாடிக்கையாளர்களுக்கு ஃப்ரீ சர்வீஸ் காலம் நீட்டிப்பு’ - டாடா நிறுவனம்
கரோனா பெருந்தொற்று காலத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஃப்ரீ சர்வீஸ் காலத்தை நீடிப்பதாக டாடா மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில், ”நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக வாடிக்கையாளர்கள் பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ளதை உணர்கிறோம். பல வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் வாகன சர்வீஸ் செய்ய முடியாமல் போகக்கூடும். எனவே, ஏப்ரல், மே மாதங்களில் வேலிடிட்டி முடிவுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாரண்டி காலத்தையும், ஃப்ரீ சர்வீஸ் காலத்தையும் வரும் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை நீடித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளது.
மேலும், இக்கட்டான காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்களின் நலனிற்கு நிறுவனம் பிரதான உரிமை வழங்குவதாகவும் கூறியுள்ளது.