தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஜெட் ஏர்வேஸ் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் நரேஷ் கோயல்

பெரும் கடனில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிலிருந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் இன்று விலகுகின்றனர்.

Naresh goyal

By

Published : Mar 25, 2019, 3:05 PM IST

Updated : Mar 25, 2019, 7:51 PM IST

கடந்த சில மாதங்களாகவே ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்துவருகிறது. இம்மாதத் தொடக்கத்தின்போது சுமார் ஆறாயிரத்து 500 கோடிக்கு மேல் கடன் சுமை அதிகரித்ததால் நிறுவனத்தின் அன்றாட அலுவல்களை நடத்துவதிலேயே பெரும் சிக்கல் ஏற்பட்டது.

வங்கிக்குச் செலுத்தவேண்டிய தொகைகள், வேண்டிய முதலீடுகள், விமானிகளுக்கான சம்பளம் ஆகியவற்றை அளிப்பதே பெரும் சிரமத்திற்குரிய விஷயமாக மாறியது. ஒரு கட்டத்தில் நிதி நெருக்கடி காரணமாக 40 விமானங்களை இயக்க முடியாதளவிற்கு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.

இந்நிலையில், நடப்பு நிதியாண்டு மார்ச் மாத இறுதியுடன் முடிவடையவுள்ளதால் அதற்குள் நிர்வாகக் குழுவிலிருந்து நரேஷ் கோயல் விலகவேண்டும் எனப் பங்குதாரர்கள் தரப்பிலிருந்து அழுத்தம் தரப்பட்டுள்ளது.

இதையடுத்து நிறுவனத்தில் தனது பங்கை 51 விழுக்காட்டிலிருந்து பாதியாக குறைத்து தலைமைப் பொறுப்பிலிருந்து நரேஷ் கோயல் இன்றுடன் விலகுகிறார். அத்துடன் அவரின் மனைவியும் விலகவுள்ளார்.

ஜெட் ஏர்வேஸ்

இந்தியாவின் இரண்டாவது பெரிய விமான போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸின் நிர்வாகக் குழு முற்றிலுமாக மாற்றியமைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

புதிய முதலீட்டாளர்களை உள்ளடக்கிய மாற்றியமைக்கப்பட்ட நிர்வாகம் சில மாதங்களில் உருவாக்கப்படும் என மற்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர். நிறுவனத்தில் வினய் தூபே தலைமை செயல்அலுவலர்பொறுப்பில் தொடர்ந்து நீடிக்கவுள்ளார். அத்துடன் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் 24 விழுக்காடுபங்குதாரராக உள்ள எத்தியட் ஏர்வேஸ் நிறுவனம் ஒப்பந்தத்தை தொடர்வதா அல்லது வெளியேறுவதா என்பதை இம்மாத (மார்ச்)இறுதிக்குள் முடிவுசெய்யும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Last Updated : Mar 25, 2019, 7:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details