பெங்களூரு: தங்கள் ஊழியர்களின் கரோனா தடுப்பூசி செலவை தாங்களே ஏற்றுக்கொள்வதாக இன்ஃபோசிஸ், அசஞ்சர் ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இது குறித்து இன்ஃபோசிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “எங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் போடப்படும் கரோனா தடுப்பூசிக்கான செலவை நிர்வாகம் ஏற்கும்.
இது அவர்களுடன் இருக்கும் குடும்பத்தினருக்கும் பொருந்தும். அரசின் நெறிமுறைகளை பின்பற்றி தனியார் மருத்துவமனைகளுடன் உடன்படிக்கை மேற்கொண்டு, ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அசஞ்சர் தகவல் தொழில்நுட்ப நிறுவனமும் இந்த முடிவை எடுத்துள்ளது.