சுண்ணாம்பு, சாம்பல் ஆகிய இரு நிறங்களில் இக்கருவியைப் பயனர்களுக்காகக் களமிறக்கியுள்ளது கூகுள் நிறுவனம். இந்த சாதனமானது ஃப்ளிப்கார்ட், டாடா கிளிக், க்ரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆகிய இணைய சந்தைகளில் பயனர்கள் வாங்கிக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனத்திற்குப் போட்டியாக இதன் விலை ரூ.9,999என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கூகுளின் புதிய ‘நெஸ்ட் ஹப்’ ஸ்மார்ட் ஸ்பீக்கர்: விலை வெறும் ரூ.9999 தான்...!
அமேசான் நிறுவனத்தின் ‘அமேசான் எக்கோ’ எனும் திறன்மிகு ஒலிக்கருவிக்குப் போட்டியாக, கூகுள் நிறுவனம் ‘நெஸ்ட் ஹப்’ எனும் புதிய ஒலிக்கருவியை இணையச் சந்தையில் வெளியிட்டுள்ளது.
கூகிளின் புதிய ‘நெஸ்ட் ஹப்’ ஸ்மார்ட் ஸ்பீக்கர்
கூகுள் நெஸ்ட் ஹப்பின் சிறப்பம்சங்கள்
- 7” தொடுதிரை கொண்டு இயங்குகிறது
- ஆண்ட்ராய்டு, ஐபோன், மேக், விண்டோஸ் ஆகிய இயங்குதளங்களில் இதனை இயக்க முடியும்
- புளுடூத் 5.0 உடன் வைஃபை இணைப்பு கொண்டுள்ளது
- கூகுள் நிறுவனத்தின் செயலிகளான கூகுள் அஸிஸ்டெண்ட், யூ-டியூப், கூகுள் போடோஸ், நாள்காட்டி. கூகுள் செய்திகள், டுயோ, ப்ளே ஸ்டோர் உள்ளடங்கியுள்ளது.
- கூகுள் அல்லாமல் வெளி நிறுவனங்களின் செயலிகளான ஸ்போடிஃபை, வூட், கானா, ஜியோ சாவன் ஆகியவையும் அடங்கும்
- கூகுளின் செயற்கை நுண்ணறிவு திறன் மூலம் ‘வாய்ஸ் மேட்ச்’ பயனர்களின் குரலைத் தெளிவாக உள்வாங்கி செயல்படும் தொழிற்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது.