நடுவானில் சில விமானங்களில் காற்று அழுத்தம் தொடர்பாக கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் இது குறித்து சோதனைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
விமானத்தின் கதவு முத்திரைகளை ஆய்வுசெய்ய உத்தரவு!
விமானங்களில் உள்ள கதவுகளின் முத்திரைகளைச் சோதனை செய்யுமாறு விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முத்திரைகள் சரியாக இல்லை என்றால் நடுவானில் விமானத்தில் உள்ள காற்று அழுத்தத்தில் மாறுபாடு இருக்கும். இது பயணிகளுக்கு ஹைபோக்ஸியாவை உண்டாக்கும் என்று ஆணையம் எச்சரித்துள்ளது.
விமான போக்குவரத்து
விமானத்தில் போதுமான காற்றும், அதன் உள்ளே அழுத்தத்தை உறுதிப்படுத்த அதிநவீன காற்று கட்டுப்பாட்டு அமைப்புகளும் உள்ளன.
எனினும் கதவுகளின் முத்திரை செயலிழப்பு காரணமாக பயணிகள் ஹைபோக்ஸியாவால் பாதிக்கப்படலாம் என்றும், சில நேரங்களில் இது அபாயகரமானதாகக்கூட மாறலாம் எனவும் ஆணையம் எச்சரித்துள்ளது.