சென்னை: ஸ்டார்ப்அப் நிறுவனம் சார்ஜ்பீ, நிறுவனங்களுக்கான பில்லிங் மற்றும் நிதி ஆதார மேலாண்மை சேவைகளை வழங்கி வருகிறது.
பில்லிங், இன்வாய்ஸ், பேமென்ட், வருமானம் உள்ளிட்ட நிறுவன பணிகளை முழுக்க முழுக்க நவீனமயமாக்கி வருகிறது. இந்நிறுவனம் தற்போது முதலீட்டாளர்களிடம் இருந்து 125 மில்லியன் டாலர் (ரூ.942 கோடி ரூபாய்) நிதியை பெற்றுள்ளது. ஷஃப்பயர் வென்டர்ஸ், டைகர் கிளோபல், இன்சைட் வென்சர் பார்ட்னர்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து இந்நிதியை திரட்டியுள்ளது.
இதன்மூலம் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த மதிப்பு 1.4 பில்லின் டாலராக (சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் இந்நிறுவனத்தின் மதிப்பு 3 மடங்கு உயர்ந்துள்ளது. சார்ஜ்பீ நிறுவனத்தின் மதிப்பு 1 பில்லியன், அதாவது 100 கோடி டாலரை எட்டியுள்ளதால் யூனிகார்ன் அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
ஆட்டோ ஓட்டுநர் மீண்டும் குத்துச்சண்டை களம் காண உதவிய ஆனந்த்!
இதன்மூலம் நாட்டில் இந்தாண்டு பில்லியன் டாலர் கிளப்பில் இணைந்த 11 நிறுவனமாக சார்ஜ்பீ மாறியுள்ளது. கடந்தாண்டு 10 நிறுவனங்கள் யூனிகார்ன் நிறுவனமாக மாறிய நிலையில் இந்தாண்டு முதல் 4 மாதங்களிலேயே 11 நிறுவனங்கள் 100 கோடி டாலர் மதிப்பை அடைந்துள்ளன.தற்போது உலகின் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் வணிகத்தில் ஈடுபட்டு வரும் சார்ஜ்பீ நிறுவனம், தற்போது தனது வணிகத்தை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக உலகெங்கிலும் உள்ள பெரு நிறுவனங்கள் முதல் புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்கள் வரை தானியங்கி பில்லிங் சேவையை நோக்கி நகர்வதால் சார்ஜ்பீ நிறுவனம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை சந்தித்துள்ளது. தற்போது அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.