தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 18, 2020, 3:12 PM IST

ETV Bharat / business

இன்று முதல் மீண்டும் யெஸ் வங்கி சேவை தொடக்கம்

டெல்லி: 15 நாள்களுக்கு முன் நிறுத்தப்பட்ட யெஸ் வங்கி சேவைகள் இன்று மாலை 6 மணிக்கு மீண்டும் தொடங்கவுள்ளது.

yes bank
yes bank

நிதி நெருக்கடியில் சிக்கி திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்ட தனியார் வங்கியான யெஸ் வங்கி இன்று மீண்டும் சேவையைத் தொடங்கவுள்ளது. வாராக்கடன் பிரச்னையால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்ட யெஸ் வங்கியின் நிர்வாகப்பொறுப்பை ரிசர்வ் வங்கி கடந்த மார்ச் 5ஆம் தேதி கையிலெடுத்துக்கொண்டது.

ரிசர்வ் வங்கி நிறுவனர் ராணா கபூர் நிதி முறைகேடு செய்த வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வங்கியின் நிர்வாகப் பொறுப்பு பாரத ஸ்டேட் வங்கிக்கு வழங்கப்பட்டது.

மேலும் அந்த வங்கியின் அன்றாட சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு, வாடிக்கையாளர்கள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க தற்காலிக தடைவிதிக்கப்பட்டிருந்தது.

நிதி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்பேரில் பாரத ஸ்டேட், ஐசிஐசிஐ, ஆக்சிஸ், ஹெச்.டி.எஃப்.சி. உள்ளிட்ட வங்கிகள் நிதி சீரமைப்புக்காக யெஸ் வங்கியில் முதலீடு செய்தன.

இதையடுத்து, யெஸ் வங்கி மீது அன்றாட சேவைகளுக்காக விதிக்கப்பட்டிருந்த தடை இன்று மாலை 6 மணியுடன் நீங்குகிறது. யெஸ் வங்கியின் நிர்வாக இயக்குநராகப் பிரசாந்த் குமார் ரிசர்வ் வங்கி சார்பில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:950 கோடியில் 4,865 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன - முதலமைச்சர் பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details