சென்னை : சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் இன்றும் (ஜூலை 14) தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரித்து காணப்பட்டது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.36 ஆயிரத்து 248 என விற்பனையாகிவருகிறது.
அதாவது கிராமுக்கு ரூ.13 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4 ஆயிரத்து 518 என விற்பனையானது. வெள்ளியை பொறுத்தமட்டில் கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.73 ஆயிரத்து 900 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாட்டின் மற்ற முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், திருவனந்தபுரம், புனே உள்ளிட்ட பகுதிகளிலும் தங்கத்தின் விலை அதிகரித்து விற்பனையாகிவருகிறது.
வரும் நாள்களில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் அதிகமாக நடைபெறுவதாலும், தங்கத்தின் மீது பலர் முதலீடு செய்துவருவதாலும் தங்கம், வெள்ளி விலை அதிகரித்து காணப்படுவதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க : தங்கத்தில் முதலீடு செய்யலாமா?