தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

Share Market: அள்ளிக்கொடுத்த அதானி வில்மர்!

இன்றைய (பிப்.9) வர்த்தகத்தின் இறுதியில் கோல் இந்தியா ஐந்து விழுக்காடும், மாருதி சுசூகி 4 விழுக்காடும் இந்துஸ் இந்த் வங்கி, பஜாஜ் ஆட்டோ, ஹிண்டால்கோ தலா 3 விழுக்காடும் உயர்வைத் தந்தன.

அதானி வில்மர்
அதானி வில்மர்

By

Published : Feb 9, 2022, 8:17 PM IST

அமெரிக்க பங்குச்சந்தை, ஆசியப் பங்குச்சந்தைகள், ஐரோப்பியப் பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட உயர்வு காரணமாக இந்தியப் பங்குச்சந்தைகள் வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே வீறுகொண்டு எழுந்தன.

ஆசியாவின் முதல் பணக்காரரான ரிலையன்ஸின் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத்தள்ளி முதலிடத்துக்கு முன்னேறினார், அதானி குழுமங்களின் தலைவர் கெளதம் அதானி.

ஜனவரி மாத மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களில் சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் மூலம் 11, 600 கோடி சந்தைக்குள் வந்தது. கடந்த ஆறு மாதங்களாக 10,000 கோடிக்கும் மேல் இப்படி வந்து கொண்டு இருக்கிறது என்பன போன்ற செய்திகள் சந்தைகளை மேலே மேலே உயர்த்தின .

நேற்று சந்தையில் பட்டியல் இடப்பட்ட அதானி வில்மர் பங்குகள், இன்றைய சர்க்யூட் விலையைத் தொட்டது. நேற்று 17 விழுக்காடு உயர்வுகண்ட நிலையில் இன்று மேலும் 20 விழுக்காடு அள்ளித்தந்து பங்கு ஒன்றுக்கு 53 ரூபாய் உயர்வுடன் முடிந்தது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 657 புள்ளிகளும் நிஃப்டி 197 புள்ளிகளும் உயர்ந்து முடிந்தன.

வர்த்தகத்தின் இறுதியில் கோல் இந்தியா ஐந்து விழுக்காடும், மாருதி சுசூகி 4 விழுக்காடும் இந்துஸ் இந்த் வங்கி, பஜாஜ் ஆட்டோ, ஹிண்டால்கோ தலா 3 விழுக்காடும் உயர்வைத் தந்தன.


இதையும் படிங்க: முடிதிருத்தும் நிலையங்களிலும் சாதியப் பாகுபாடா? இது மிகப்பெரிய பிரச்னை - நீதிபதிகள் வேதனை

ABOUT THE AUTHOR

...view details