பங்குச்சந்தை தொடங்கியது சிறிது நேரத்தில், சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி. இன்று தொடங்கிய பங்குசந்தையில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,075 சரிந்து 37,394.85 எனவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 325.55 புள்ளிகள் சரிந்து 10943.45 எனவும் வர்த்தகமாகிவருகிறது.
மேலும் 9.20 மணியளவில் சென்செக்ஸ் 1188 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்து வர்த்தகமாகியுள்ளது.
தொடக்கத்திலேயே மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்ததால், இன்று வர்த்தகம் சிறப்பாக இருக்காது எனப் பங்குதாரர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் சரிவை சந்தித்த பங்குகளில் ரிலையன்ஸ், டாடா மோட்டார்ஸ், யெஸ் வங்கி நிறுவன பங்குகள் இடம்பெற்றுள்ளன.
ஆனால் சிறப்பாகச் செயல்படும் பங்குகளில் சென்செக்ஸ், நிஃப்டியில் உள்ள ஒரு நிறுவன பங்குகள்கூட இடம்பெறவில்லை என்பது பங்குச்சந்தையின் மிகப்பெரிய வீழ்ச்சியைக் காட்டுகிறது.
இதையும் படிங்க: யெஸ் வங்கியைக் கட்டுக்குள் கொண்டுவந்த ரிசர்வ் வங்கி