2005ஆம் ஆண்டு டிராய் எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியது. அதன்படி, சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (adjusted gross revenue) அடிப்படையில் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 1.47 லட்சம் கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று இன்று உச்ச நீதிமன்றத்தில் வோடபோன் நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் அடிப்படையில் இன்று ரூ. 2,500 கோடியையும், வரும் வெள்ளிக்கிழமைக்குள் ரூ. 1,000 கோடியையும் செலுத்துகிறோம் என்றும், தங்களை நெருக்கடிக்குள்ளாக்கும் நடவடிக்கைகளை டிராய் எடுக்கக்கூடாது என்றும் வோடபோன் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.