தமிழ்நாடு

tamil nadu

உற்பத்திசார் திட்டங்கள் இந்தியாவை புதுமையின் பாதையில் கொண்டுசெல்லும்: அமிதாப் கந்த்

மத்திய அரசின் உற்பத்திசார் திட்டங்கள் இந்தியாவை புதுமையின் பாதையில் கொண்டுசெல்லும் என நிதி ஆயோக் தலைமை செயல் அலுவலர் அமிதாப் கந்த் கூறியுள்ளார்.

By

Published : Feb 23, 2021, 8:57 PM IST

Published : Feb 23, 2021, 8:57 PM IST

Amitabh Kant
Amitabh Kant

நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அலுவலர் அமிதாப் கந்த் 'பயோ ஏசியா 2021' கருத்தரங்கில் மெய்நிகர் வாயிலாக பங்கேற்று உரையாற்றினார். அதில் இந்தியாவின் உற்பத்தித்துறைக்கு அரசு ஒதுக்கியுள்ள திட்டங்கள், அதன்மூலம் நாட்டின் வளர்ச்சி இலக்கை எட்டுவது எப்படி என விளக்கினார்.

அவர் பேசுகையில், மருத்துவம் உள்ளிட்ட 10 முக்கிய துறைகளில் உற்பத்தி சார்ந்து பல திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டங்களுக்கு முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் மத்தியில் நல்ல வரவேற்பு வந்துள்ளது.

இதுவரை 83 உற்பத்தியாளர்கள் 215க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை அளித்துள்ளனர். இது இந்தியாவை புதுமையின் பாதைக்குக் கொண்டு சென்று நாட்டின் தன்னிறைவை உறுதிபடுத்தும். புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு கல்விக்கூடங்கள் மற்றும் தொழில்துறை இடையே நல்ல ஒருக்கிணைப்பு தேவை என்றார்.

இந்த கருத்துரங்கில் தெலங்கானா ஐ.டி. துறை அமைச்சர் கே.டி. ராமாராவ், பயோக்காயின் நிறுவனத் தலைவர் கிரண் மஜும்தார் ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:சர்வதேச சந்தையே பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம்: மத்திய அமைச்சர் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details