தமிழ்நாடு

tamil nadu

’வேலையில்லாத் திண்டாட்ட காலத்தில் 'வி' வடிவ பொருளாதார மீட்சியா...’ - ப.சிதம்பரம் சாடல்!

By

Published : Sep 9, 2021, 3:56 PM IST

"வேலையில்லாமல் மக்கள் திண்டாடி வரும் நிலையில், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான தேவையும் அதிகரித்துள்ளது. இந்த வேளையில் ஒன்றிய அரசு 'வி' வடிவ பொருளாதார மீட்சியை நோக்கி பயணிப்பதாக ஏழை மக்களை கொச்சைப்படுத்தி வருகிறது" என முன்னாள்ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.

ப சிதம்பரம் ட்வீட்
ப சிதம்பரம் ட்வீட்

ஹைதராபாத்: முன்னாள் ஒன்றிய நிதியமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், ஒன்றிய அரசின் பொருளாதார நிலைபாடு குறித்து ட்வீட் செய்துள்ளார்.

அதில், "நாட்டு மக்கள் வேலைவாய்ப்பில்லாமல், திணறி, திண்டாடி வருகின்றனர். அதன் காரணமாகவே, 100 நாள் வேலைவாய்ப்பிற்கான தேடலும் அதிகரித்துள்ளது. இதை தான் முதலில் சரிசெய்ய வேண்டும்.

ஆனால் ஒன்றிய அரசோ, நாட்டின் பொருளாதாரம், ஆங்கில எழுத்தான, 'வி' வடிவ மீட்சியில் இருப்பதாக, மாதாந்திர பொருளாதார நிலை குறித்த அறிக்கையில் தெரிவித்து வருகிறது.

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும், அவரின் கீழ் இயங்கும் அலுவலர்களும், விவசாய கிராமங்களை கொஞ்சம் எட்டிப்பார்க்க வேண்டும். பஞ்சு இருக்கையில் அமர்ந்திருக்கையில் மக்கள் படும் துன்பம் எதுவும் தெரியாது.

வெறும் காலுடன் நடக்கையில் தான், விவசாய கிராமங்களின் நிலை குறித்து நீங்கள் உணர முடியும். விவசாய மக்களை, ஏழை - நடுத்தர மக்கள் இருக்கும் பகுதிகளை சென்று வெறும் கண் கொண்டு பார்க்கவேண்டும்.

அப்போதுதான் அவர்கள் ஒரு நாளை கழிக்க என்னவெல்லாம் கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள், சோற்றுக்கு என்ன செய்கிறார்கள், படுத்து உறங்க வீடிருக்கிறதா என்பனவற்றை நீங்கள் அறிய முடியும்" என்று பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details