தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 18, 2020, 10:01 AM IST

ETV Bharat / business

ரயில்வே தனியார்மயமாக்கும் எண்ணமில்லை - பியூஷ் கோயல்

டெல்லி: இந்திய ரயில்வே துறை மக்களுக்குச் சொந்தமானது என்பதால் அதைத் தனியார்மயமாக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என ரயில்வே துறை அமைச்ச பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

goyal
goyal

இந்திய ரயில்வேயை தனியார்மயமாக்கல் குறித்து ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், இந்திய ரயில்வே என்பது இந்திய மக்களுக்கானது, அது மக்களிடம் மட்டுமே இருக்கும், அதைத் தனியாரிடம் ஒப்படைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அடுத்த 12 ஆண்டுகளில் சுமார் 50 லட்சம் கோடி ரூபாய் ரயில்வேயில் முதலீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்த பியூஷ் கோயல், நடைமுறைத் தேவைக்காகவே சில வளர்ச்சித் திட்டங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகின்றன என்றார்.

ரயில்வே ஊழியர்களின் வேகமான செயல்திறன் காரணமாக வரும் 2024ஆம் ஆண்டுக்குள் இந்திய ரயில்வேயின் வழித்தடங்கள் முழுவதும் மின்மயமாக்கப்படும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் .

20 ஆயிரம் மெகாவாட் சூரிய மின் உற்பத்தியை ரயில்வே வழித்தடங்கள் மூலம் உற்பத்திசெய்ய ரயில்வே திட்டமிட்டுள்ளதாகவும், கடந்த ஓராண்டில் ஒரு விபத்துகூட ஏற்படாத வகையில் இந்திய ரயில்வே செயல்பட்டுள்ளதாகவும் பியூஷ் கோயல் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ரஞ்சன் கோகாய் மீது உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கடும் தாக்கு!

ABOUT THE AUTHOR

...view details