கரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் நீண்ட நாள்களாக தொழிற்சாலைகள் செயல்படாமல் மூடப்பட்டிருந்தன. இதனிடையே மே 3ஆம் தேதிக்கு பின் பல மாநிலங்களில் தொழிற்சாலைகள் நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டு வருகின்றன.
கார் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வரும் மாருதி சுசூகி மார்ச் 22ஆம் தேதியோடு தனது உற்பத்தியை நிறுத்தியது. இந்நிலையில் மே 12ஆம் தேதி முதல் மானேசரில் உள்ள ஆலையில் உறுத்தியைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாருதி சுசூகி சார்பாக பேசுகையில், ''ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி முதலே மனேசர் ஆலை செயல்படலாம் என ஹரியானா மாநில அரசு அனுமதி வழங்கியது. ஆனால் வாகன விற்பனை இல்லாமல் ஆலையில் வாகன உற்பத்தியை தொடங்குவதில் நிறுவனத்திற்கு விருப்பம் இல்லை. இதனால் மே 12ஆம் தேதி முதல் மனேசர் ஆலையில் வாகன உற்பத்தியை தொடங்குவதாக உள்ளோம்.