தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

உற்பத்தியை குறைத்த மாருதி சுசூகி

முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசூகி கடந்த மாதம் வாகன உற்பத்தியை வெகுவாக குறைத்துள்ளது.

மாருதி

By

Published : Mar 20, 2019, 11:04 PM IST

சந்தையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி தனது உற்பத்தியைக் கடந்தமாதம் வெகுவாக குறைத்துள்ளது. சமீப காலமாகவே இந்தியாவின் வாகனச் சந்தையானது மிகவும் மந்த நிலையில் உள்ளதாகப் பொருளாதார நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தியச் வாகனச்சந்தையில் ஒட்டுமொத்த வாகன விற்பனை நடப்புக் காலாண்டில் 9 சதவீதம் வரை சரிவைச் சந்திக்கும் எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாகத் தேர்தல் காலத்தில் விற்பனை பெரிதாக இருக்காது என்பதால் தனது உற்பத்தியை முன்னணி நிறுவனங்கள் குறைக்கத் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக, மருதி சுசூகி நிறுவனம் பிப்ரவரி மாத உற்பத்தியை 8 சதவீதம் வரை குறைத்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாருதி நிறுவனத்தின் மொத்த உற்பத்தி எண்ணிக்கையானது 1 லட்சத்து 62 ஆயிரத்து 524 ஆக இருந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில் எண்ணிக்கையானது 1 லட்சத்து 48 ஆயிரத்து 959 ஆகக் குறைந்துள்ளது. இது கடந்தாண்டை ஒப்பிடும் போது 8.3 சதவீதம் குறைவாகும். இப்புள்ளி விவரங்களை எப்.எ.டி.ஏ எனப்படும் வாகன ஒப்பந்த விற்பனையாளர் கூட்டமைப்பு சங்கம் வெளியிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details