தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

கரோனா: சரியும் தொழில் துறை உற்பத்தி, அதிகரிக்கும் வேலையின்மை

டெல்லி கரோனா தாக்கத்தின் காரணமாக இந்தியத் தொழில் துறை உற்பத்தி பெரும் சரிவைச் சந்தித்து, நாட்டின் வேலையின்மை பன்மடங்காக அதிகரித்துள்ளது.

By

Published : Jun 1, 2020, 5:38 PM IST

Industry
Industry

கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பின் தாக்கம் சுகாதாரத் துறை மட்டுமல்லாமல் இந்தியாவின் பொருளாதாரத்தையும் ஒட்டுமொத்தமாகப் பாதித்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக நாட்டில் பொருளாதார மந்தநிலை நீடித்த நிலையில் கரோனா ஊரடங்கு அறிவிப்பு ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பெரும் சரிவில் தள்ளியுள்ளது.

இந்நிலையில் இந்தியத் தொழில் துறை உற்பத்தி மூன்று ஆண்டுகள் இல்லாத சரிவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் காரணமாக 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்துள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நாட்டின் வளர்ச்சி எனப்படும் உள்நாட்டு மொத்த உற்பத்தி 4.2 விழுக்காடாகச் சரிவைச் சந்தித்துள்ளது என மத்திய அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. இது அடுத்த காலாண்டில் மேலும் சரியும் இடர் உள்ளது.

இதையும் படிங்க:லாக்டவுன் 5.0: சுற்றுலாத்துறைக்கு தளர்வுகள் இருக்கும் என எதிர்பார்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details