தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

அறிமுகப்படுத்தப்பட்டு 40 நாள்களில் 30,000 புக்கிங் - அசத்தும் i20 கார் விற்பனை

டெல்லி: கடந்த நவம்பர் 5ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட i20 காரை வாங்குவதற்கு 30,000 பேர் முன்பதிவு செய்திருப்பதாக ஹோண்டா மோட்டார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

By

Published : Dec 14, 2020, 5:22 PM IST

i20 கார்
i20 கார்

நாட்டின் இரண்டாவது பெரிய பயணிகள் வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா மோட்டார் இந்தியா, i20 காரை கடந்த நவம்பர் 5ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. காரை வாங்குவதற்காக நாற்பது நாள்களில் 30,000 பேர் முன்பதிவு செய்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, i20 வகையைச் சேர்ந்த 10,000 கார்கள் விற்கப்பட்டுள்ளதாக ஹோண்டா மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் இயக்குநர் தருண் கார்க் கூறுகையில், "இந்திய வாடிக்கையாளர்களின் மனதை கவர்ந்த புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட i20 காரை வாங்குவதற்கு பலர் ஆர்வம் காட்டிவருகின்றனர். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள கார், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளது.

கார் கச்சிதமாக உள்ளதன் காரணமாகவே 85 விழுக்காடு முன்பதிவு நடைபெற்றுள்ளது" என்றார்.

மாருதி சுசுகி பலேனோ, டாடா மோட்டார்ஸ் அல்ட்ராஸ், டொயோட்டா கிளான்ஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக i20 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார், 6.79 லட்சம் ரூபாயிலிருந்து 11.17 லட்சம் ரூபாய்வரை ஐந்து விலைகளில் விற்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details