தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ரான்பாக்ஸி முன்னாள் தலைவர் கைது

டெல்லி: ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அலுவலர் (சிஇஒ) மல்வீந்தர் சிங் டெல்லி பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

Ranbaxy

By

Published : Oct 11, 2019, 10:28 AM IST

கைது

ரெலிகேர் நிதி முதலீட்டு நிறுவனத்தில் இரண்டு ஆயிரத்து 397 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷி வீந்தர் சிங், அவரது சகோதரர் ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து டெல்லி பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலர்கள் விசாரணை நடத்திவந்தனர்.

விசாரணை

இந்த நிலையில், நேற்று இரவு மல்வீந்தர் சிங்கை பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலர்கள் கைது செய்தனர். இதையடுத்து அவர் டெல்லி கொண்டுவரப்பட்டார். அவரிடம் இது குறித்து விசாரணை நடந்துவருகிறது. இது தொடர்பாக பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பலவீனமான பொருளதாரப் பின்னணி கொண்ட நிறுவனத்துக்கு கடன் கொடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

ரூ.740 கோடி மோசடி

ரான் பாக்ஸி நிறுவனம் மீது 740 கோடி ரூபாய் கடன் மோசடி புகார் எழுந்துள்ளது. ரான் பாக்ஸி நிறுவனம் பல்வேறு நிதி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது. பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி, சில நிதி நிறுவனங்கள் தொடர்ச்சியாக மோசடி புகாரில் சிக்கிவருவது முதலீட்டாளர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்கலாமே

ஊழல் வழக்கு: பஞ்சாப் மகாராஷ்டிரா வங்கியின் முன்னாள் இயக்குநருக்கு நீதிமன்ற காவல்

ABOUT THE AUTHOR

...view details