தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

நவம்பர் மாதத்தில் வீழ்ச்சி கண்ட எட்டு தொழில்துறைகள்

தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக நாட்டின் எட்டு முக்கிய உள்கட்டமைப்பு சார் துறைகள் நெகட்டிவ் வளர்ச்சியை கண்டுள்ளன.

Eight core industries
Eight core industries

By

Published : Dec 31, 2020, 7:44 PM IST

நாட்டின் தொழில்துறை குறித்த முக்கிய புள்ளிவிவரத்தை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக நாட்டின் எட்டு முக்கிய உள்கட்டமைப்பு சார் துறைகள் நெகட்டிவ் வளர்ச்சியை கண்டுள்ளன.

நவம்பர் மாத நிலவரப்படி, இந்த எட்டு துறைகள் 2.6 விழுக்காடு நெகட்டிவ் வளர்ச்சியைக் கண்டன. நிலக்கரி, உரம், மின்சாரம் ஆகிய துறைகளைத் தவிர மற்ற அனைத்து உள்கட்டமைப்பு சார் துறைகளும் நெகட்டிவ் வளர்ச்சியை கண்டன.

கச்சா எண்ணெய் -4.9%, இயற்கை எரிவாயு, -9.3%, சுத்திகரிப்பு துறை -4.8%, ஸ்டீல் -4.4% மற்றும் சிமெண்ட் துறை -7.1% ஆக உள்ளது.

அதேவேளை, நிலக்கரி துறை 2.9%, மின்சார உற்பத்தி 2.2%, உர உற்பத்தி 1.6% என உயர்வைக் கண்டன. இந்திய தொழில்துறை உற்பத்தியில் 40.27 விழுக்காடு பங்களிப்பை மேற்கண்ட எட்டு முன்னணி துறைகள் கொண்டுள்ளன.

இதையும் படிங்க:கோவிட்-19 தாக்கம்: நாட்டின் நிதி பற்றாக்குறை வெகுவாக உயர்வு

ABOUT THE AUTHOR

...view details