தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பட்ஜெட் 2019: விவசாயிகளின் நலன் காக்க ஜி.எஸ்.டி குறையுமா?

உற்பத்தி பொருட்களின் லாபத்தை விவசாயிகளுக்கு சேரும் வகையில் ஜி.எஸ்.டி வரிக்குறைப்பு வேண்டும் என உணவுக்கிடங்கு அமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

GST

By

Published : Jul 3, 2019, 12:08 PM IST

நாட்டில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுப்பொருட்களைச் சேமித்து வைக்கும் பணியை உணவுக்கிடங்குகள் மேற்கொண்டு வருகின்றனர். சந்தையில் உபரி பொருட்களை சேமித்து தேவை அதிகரிக்கும் காலத்தில் இந்த கிடங்குகள் பூர்த்தி செய்கின்றன.

இந்நிலையில், இந்த கிடங்குகளின் சேவைகளுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. இந்த வரி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வரிக்குறைப்பு விவசாயிகளுக்கு பெரும் நன்மையை ஏற்படுத்தும் எனவும், அவர்களின் உற்பத்திக்கு சரியான லாபத்தைத் தர வழிவகை செய்யும் எனவும் உணவுக்கிடங்கு உற்பத்தித் துறையினர் நிதியமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

வரும் 5ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ள நிலையில் இது குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details