தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 17, 2020, 7:39 PM IST

ETV Bharat / business

பிஎஸ் 4 ரக வாகனங்களை விற்க கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை நீடிக்கவேண்டும்!

டெல்லி: பிஎஸ்-4 (BS-IV) ரக வாகனங்களால் காற்று மாசுபாடு அதிகரிப்பதால், அதைக் கட்டுப்படுத்த மே 31ஆம் தேதிக்கு பிறகு பிஎஸ்-4 ரக வாகனங்களை விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு தெரிவித்த நிலையில், அதற்கு அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தை நீட்டிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் ஆட்டோமொபைல் டீலர்ஸ் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

BS-IV Vehicle sales stops
BS-IV Vehicle sales stops

ஏப்ரல் 1, 2020 முதல் பிஎஸ்-4 வாகன மாசுக்கட்டுப்பாடு கொள்கையை கட்டாயச் சட்டமாக மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. வரும் ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பின்னர் பிஎஸ்-4 வாகனங்களை உற்பத்தி செய்யவோ விற்கவோ கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிஎஸ்-4 அல்லது பிஎஸ் 6 என்றால் என்ன? BS என்றால் ஆங்கிலத்தில் பாரத் ஸ்டேஜ் எனப் பொருள். இந்தியாவிற்கு ஏற்ப இந்திய அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள வாகன மாசுக்கட்டுப்பாடு கொள்கை. இதில் பிஎஸ் 6 (BS-VI) என்பது அச்சட்டத்தின் வீரியத்தை உணர்த்துகிறது. இதனால் வரையில் நாம் பிஎஸ்-4 ரக வாகனங்களைப் பயன்படுத்தி வந்தோம்.

இந்த பிஎஸ்-4 ரக வாகனங்களைவிட, பிஎஸ்-6 ரக வாகனங்கள் குறைவான மாசை ஏற்படுத்தும். பிஎஸ்-6 வாகனத்திலிருந்து வெளியேறும் புகையில் உள்ள சல்பர் என்னும் அமிலத்தன்மை குறைவு. மேலும், வாகனப் புகையில் புற்றுநோயை ஏற்படுத்து நச்சுப் பொருள் பிஎஸ் 6 வாகனத்தில் 80 சதவிகிதம் குறைவு.

இதனாலே, பிஎஸ் 5(BS-V) என்னும் ரகத்தை அறிமுகம் செய்யாமல் நேரடியாக பிஎஸ்-6 வாகனச் சட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. பிஎஸ் 6 மிகவும் விலை அதிகமானது என்றாலும், குறைவான மாசுபாடை ஏற்படுத்தக் கூடியது. இதனாலே மக்கள் அதிகப்படியாக பிஎஸ்-6 ரக வாகனங்களை வாங்குங்கள் என மத்திய அரசு அறிவுறுத்திவருகின்றது.

கார் உற்பத்தி நிறுவனங்களும், தங்களிடம் உள்ள 8 லட்சத்துக்கும் அதிகமான பிஎஸ் 4 ரக வாகனங்களை விற்க மத்திய அரசு மார்ச் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்தது. கால அவகாசம் நிறைவு பெறவுள்ள நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்கவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஆட்டோமொபைல் டீலர்ஸ் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மனு தாக்கல் செய்துள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் சரிவில் இந்திய பங்குச்சந்தை!

ABOUT THE AUTHOR

...view details